ஷா ஆலம், செப் 21: சுங்கை ரசாவ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (எல்ஆர்ஏ) இரண்டாம் கட்டம் சிலாங்கூரின் நீர் கையிருப்பை அதிகரிக்க உதவும்.
நாளொன்றுக்கு குறைந்தது 1,400 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை (JLH) உற்பத்தி செய்யும் திறன் கொண்டதுடன், வெள்ளத் தணிப்புக்கும் உதவும் திட்டத்தை உள்ளடக்கியது இந்த திட்டம் என்று டத்தோ மந்திரி புசார் விளக்கினார்.
“இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் நவீன ஆலை மற்றும் சிலாங்கூரில் நீர் இருப்பை அதிகரிக்க உதவும்.
“நாங்கள் சிலாங்கூர் கடல் வாயிலில் கிள்ளான் ஆற்றினை (SMG) தூய்மைப்படுத்தும் திட்டத்தை மேற்கொண்ட பிறகு, ஆற்றின் நீர் தரம் மூன்றாம் நிலையில் இருந்தது. அந்த ஆற்றிலிருந்து நீரை எடுப்பது இதுவே முதல் முறையாகும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மே 30 அன்று, கோலா லங்காட்டின் கம்போங் ஶ்ரீ செடிங்கில் சுங்கை ரசாவ் எல்ஆர்ஏ கட்டுமானத்தின் முதல் கட்டத்திற்கு RM3.4 பில்லியன் செலவானது என்றும் இரண்டாவது கட்டத்தில் RM2.4 பில்லியன் செலவானது என்றும் அமிருடின் தெரிவித்தார்.
ரசாவ் நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் முதல் கட்டம் 700 JLH நீர் விநியோகத்தை உற்பத்தி செய்வதோடு கூடுதலாக 2025 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு அதிகப் பணம் தேவைப்படுகிறது. ஏனெனில் இந்த கட்டுமானம் ஓசோன் போன்ற நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது மட்டுமல்லாமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதாக கூறினார்.