NATIONAL

வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக டிரெய்லர் டிரைவர் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பு

புத்ராஜெயா, செப் 21: நேற்று ஜாலான் பெர்சியாரான் உத்தாரா கிலோமீட்டர் 5.7இல் பூச்சோங் நோக்கி செல்லும் பாதையில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக டிரெய்லர் டிரைவர் இன்று முதல் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்க காவல்துறையின் விண்ணப்பத்தை அனுமதித்த மஜிஸ்திரெட் இர்சா சுலைகா ரோஹனுடின், 29 வயதுடைய அந்நபருக்கு எதிரான விளக்கமறியல் ஆணை பிறப்பித்தார்.

இவ்விபத்தில், காலை 10.15 மணியளவில், போக்குவரத்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் உட்பட டிரெய்லர் ஒன்று நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. அவ்விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவர் ஃபாரிஸ் ஹசிக் அபு பக்கர் (25), மலேசியா தபால்நிலைய ஊழியர் மற்றும் யுஸ்வர் முகமது யுயுஸ் (39) அம்பாங் நீதிமன்ற ஊழியர் ஆவர் என புத்ராஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ஏ அஸ்மாதி அப்துல் அஜீஸ் நேற்று கூறினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்படும் இவ்விபத்து பற்றிய தகவல் அல்லது ஆதாரம் உள்ள தரப்பினர் காவல்துறை விசாரணைக்கு உதவுமாறு அஸ்மாதி நேற்று கேட்டுக் கொண்டார்.

டிரெய்லர் ஓட்டுநரிடம் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து எந்தப் பதிவும் இல்லை என்றும், அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் நெகட்டிவ் என்று கண்டறியப்பட்டது என்றும் அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :