ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாடு முழுவதும் 1,500-க்கும் அதிகமான ஆபத்துள்ள சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தெமர்லோ, செப்டம்பர் 22 -நாடு முழுவதும் மொத்தம் 1,577 அதிக ஆபத்துள்ள  சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று  பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நான்டா லிங்கி தெரிவித்தார்.

சரிவுகளை கண்காணித்து முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் நிறுவ , வரவிருக்கும்  பட்ஜெட்டில் RM 17 மில்லியன் ஒதுக்கீட்டுக்கு  அமைச்சு  விண்ணப்பிக்கும் என்றார்.

“மேலும், அமைச்சு  இது போன்ற சவால்களை   எதிர்க் கொள்ள  எப்போதும் தயார்நிலையில்  உள்ளதாகவும் ,குறிப்பாக விரைவில் வரவிருக்கும் மழைக்காலத்தை எதிர் நோக்க, கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் நாங்கள் எங்கள் சேவைகளை மேம்படுத்துவோம்” என்று நந்தா கூறினார்.

இன்று  கிழக்கு   கரை  அதிவேக நெடுஞ்சாலை 1 (LPT1) இன் மேற்கு நோக்கி KM117 இல் அமைந்துள்ள அணைக்கட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார்.

செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கப்பட்ட பழுதுபார்க்கும் பணிகள் திட்டமிடப்பட்டதை விட முன்னதாக முடிக்கப்பட்டு, KM117.8 மற்றும் KM117.9 இடையேயான  தடம்   நேற்று மாலை 6 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

“சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது,  மேலும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நீண்ட கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று நந்தா கூறினார்.

மாநிலத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த 12 நெடுஞ்சாலைகளை சீரமைக்க RM38 மில்லியன் ஒதுக்கப்பட்டது, அவற்றில் மூன்று முடிக்கப்பட்டு மீதமுள்ளவை இன்னும் செயல் பாட்டில் உள்ளன.

 

– பெர்னாமா


Pengarang :