SELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனை தொடரப்பட வேண்டும்- பொது மக்கள் எதிர்பார்ப்பு

அம்பாங் ஜெயா, செப் 25- சமையல் பொருள்களை மலிவான விலையில்
வாங்குவதற்காக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்
(பி.கே.பி.எஸ்.) ஜூவாலான் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையை
தாங்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்ததாக லெம்பா ஜெயா
தொகுதி மக்கள் கூறினர்.

கடந்தாண்டு முதல் கோழி, மீன், இறைச்சி, முட்டை, அரிசி போன்ற
சமையல் பொருள்களை பேரங்காடிகளில் வாங்குவதை தாம் நிறுத்தி
விட்டதாக குடும்ப மாதான நஜ்வா அமாடின் (வயது 34) கூறினார்.

நான் பெரும்பாலும் அத்தியாவசியப் பொருள்களை இங்குதான்
வாங்குவேன். இங்கு விற்கப்படும் பொருள்கள் விலை மலிவாகவும்
தரமாகவும் உள்ளன. குறிப்பாக அரிசி சீக்கிரத்தில் கெட்டுப்போகாது என்று
அவர் சொன்னார்.

இந்த ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையில் கிடைக்காத பொருள்களை
மட்டும் நான் பேரங்காடிகளில் வாங்குகிறேன். இந்த திட்டம்
அமல்படுத்தப்பட்டது முதல் எங்களின் மாதாந்திர செலவினம் வெகுவாக
குறைந்துள்ளது என்றார் அவர்.

இங்குள்ள அம்பாங் வாட்டர்ஃப்ராண்ட் லாமான் நியாகாவில் இன்று காலை
நடைபெற்ற லெம்பா ஜெயா தொகுதி நிலையிலான மலிவு விற்பனையின்
போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பு கண்டுள்ள நிலையில்
குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு இந்த மலிவு விற்பனை
பெரிதும் துணை புரிகிறது என்று ஓய்வு பெற்ற பணியாளரான சே டின்
(வயது 66) கூறினார்.

இந்த திட்டம் மிகச்சிறப்பானது என்பதால் சுற்றுவட்டாரங்களில்
நடைபெறும் மலிவு விற்பனைகளிலும் நான் கலந்து கொள்கிறேன்.

நேற்றுகூட கிராமாட்டில் நடைபெற்ற மலிவு விற்பனையில் கலந்து
கொண்டேன் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :