கிள்ளான்.நவ.4- சிலாங்கூர் மாநில அரசு வசதி குறைந்த இந்திய மாணவர்கள் பட்டப் படிப்பு மேற்கொள்ள ரி.ம 5,000.00 உதவி நிதியாக வழங்கியது. நேற்று 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கியது. . இந்நிதிக்கான காசோலைகளை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி எடுத்து வழங்கினார்.
கணபதிராவ் சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழுவில் இருந்த போது டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கு உதவ இத்திட்டம் கொண்டு வரப் பட்டது. இவ்வாண்டு இதே போல் இரண்டு முறை இந்திய மாணவர்களுக்கு இந்நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டது. நேற்று தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விழாவின் போது மூன்றாம் கட்ட உதவி நிதி வழங்கப்பட்டது.
டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் வசதி குறைந்த இந்திய மாணவர்கள் எதிர் நோக்கும் நிதி பிரச்னைக்கு உதவ வேண்டும் என்பதில் நான் தொடர்ந்து இத்திட்டத்தை வழி நடத்துவேன் என்று பாப்பா ராயுடு தெரிவித்தார்.
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய சமுதாய மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதி படுத்தினார்.