ஷா ஆலம், டிச 9: சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) நடத்தும் சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (எஸ்ஐபிஎஃப்) 2023 இன்னும் இரண்டு நாட்கள் நடக்க உள்ள நிலையில், 300,000 வருகையாளர்களை எட்ட முடியும் என நம்புகிறது .
சர்வதேச புத்தகக் கண்காட்சி இயக்குனர் ஜஃப்ருல்லா அரிஸ் கூறுகையில், இது டிசம்பர் 1 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டதிலிருந்து, 10 நாள் நிகழ்வுக்கு நேற்றைய நிலவரப்படி பல்வேறு வயதுடைய 200,000 வருகையாளர்கள் வரவை பெற்றுள்ளது. பல்வேறு வயது பிரிவினர், நாட்டினர் மற்றும் அண்டை நாடுகளில் இருந்தும் கூட இம்முறை புத்தக விழாவில் கலந்து கொண்டனர், மேலும் இலக்கியங்களும் மனதை தொட்ட பிரிவாக மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது.
“ புத்தக கண்காட்சி இன்னும் இரண்டு நாட்கள் நடக்க உள்ள நிலையில், இன்றும் நாளையும் இலக்கை அடைய முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். கூடுதல் இரண்டு நாட்கள் வார இறுதி விடுமுறையாக உள்ளதால் வருகையாளர்களின் இலக்கை விட அதிகமாக இருக்கும்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்