செய்தி ;சு.சுப்பையா
சுபாங்.டிச.16- இந்நாட்டின் இரப்பர் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்த முக்கிய ஆய்வு கழகமான ஆர்.ஆர்.ஐ. ரப்பர் ஆராய்ச்சி கழகம் செயல் பட்ட தோட்டம் இது. அந்த கழகத்தின் ஆய்வுகூடம் வீற்றிருந்த ரப்பர் தோட்டமான ஆர்.ஆர்.ஐ தோட்டம் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் செயல்படுகிறது.
இத்தோட்ட தமிழ்ப் பள்ளியின் 66-ஆம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு போட்டி நேற்று சிறப்பாக நடைபெற்றது. இப் போட்டி விளையாட்டுக்கு கூட்டுறவு தொழில் முனைவோர் துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார்.
டத்தோ ரமணனின் சார்பில் அவரது நாடாளுமன்ற அதிகாரி தமிழ் செல்வன் கலந்து கொண்டார். இந்த வருடாந்திர விளையாட்டுப் போட்டியை கண்டு களிக்க நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் திரண்டு வந்தனர். காலை 9.00 மணிக்கு தொடங்கி நண்பகல் 1.00 மணி வரை பல்வேறு திடல் தட போட்டி விளையாட்டுகள் சிறப்பாக நடந்தேறின.
இந்த வருடாந்திர விளையாட்டு போட்டியை தலைமை ஆசிரியர் புஸ்பராணி தலைமையில் அவருடன் பள்ளியின் அனைத்து ஆசிரியர் பெருமக்களும் இணைந்து மிகவும் நேர்த்தியாக நடத்தினர். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் அவரது செயற் குழுவினரும் கலந்துக் கொண்டு தோல் கொடுத்து உதவினர்.
இப்போட்டி விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டத்தோ ரமணனின் அலுவலக அதிகாரி, தலைமை ஆசிரியர், துணைத் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் பரிசுகளை எடுத்து வழங்கி சிறப்பித்தனர்.
இப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆர்.ஆர்.ஐ. தோட்ட வளாகத்தில் உள்ள பிரதான திடலில் சிறப்பாக நடந்தேறியது.
இந்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் இவ் வட்டார போலீஸ் துறை சார்பில் ஒரு அதிகாரி கலந்துக் கொண்டார். மாவட்ட கல்வி இலாகாவின் சார்பில் புவான் நூருல் ஹிடாயாவும் கலந்து கொண்டார். மேலும் அவ்வட்டார பி.கெ.ஆர் கட்சியின் அரசியல் தலைவர்கள் நாதன் மற்று லோகவும் தமிழ் செல்வவம் இந்திய சமூகத் தலைவர் திருமதி தேவி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த வருடாந்திர விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் சம்பியனாக வெற்றி வாகை சூடிய நீல இல்லத்தினர் தங்களது வெற்றி கோப்பையை ஏந்தி மகிழும் உற்சாகத்தை காணலாம்.