ஷா ஆலம், டிச 21- சிலாங்கூர் மாநில உபகாரச் சம்பள நிதி வாரியத்தின் உறுப்பினர்களாக கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் உள்பட மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள சிலாங்கூர் அரசு தலைமை தலைமைச் செயலகத்தின் எம்டெஸ் கூட்ட அறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த பதவிக்கான நியமனக் கடிதங்களை சம்பந்தப்பட் வாரிய உறுப்பினர்களிடம் ஒப்படைத்தார்.
பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷிட் மற்றும் மந்திரி புசாரின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரி முகமது நஸ்ரி நோ ஆகியோர் அந்த வாரியத்தில் இடம் பெற்றுள்ள இதர இரு உறுப்பினர்களாவர்.
வாரிய உறுப்பினர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என்று மந்திரி புசார் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.