செய்தி ; சு.சுப்பையா
புத்ராஜெயா.17- வரலாற்றில் முதன் முறையாக 2 நாட்களுக்கு KTM கொம்யூட்டர் இரயில் சேவை, மலேசியா இந்து பக்தர்களுக்கு இலவசமாக பத்துமலை திருத்தலத்திற்கு சென்று திரும்ப வழங்கப்படுகிறது. இதனை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லொக் தெரிவித்தார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் KTM கொம்யூட்டர் இரயில் சேவை கிள்ளான் துறைமுக ரயில் நிலையத்திலிருந்து பத்துமலைக்கும், மற்றொன்று தெற்கே தம்பின்ரயில் நிலையத்திலிருந்து பத்துமலைக்கும் சேவையை இலவசமாக வழங்க உள்ளது.
இம்மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் 2 நாட்களுக்கு 28 ரயில்நிலையங்கள் 24 மணி நேர சேவையை வழங்குகிறது.
மொத்தம் 72 KTM கொம்யூட்டர் இரயில் சேவை இதில் அடங்கும். பத்துமலை க்கான சிறப்பு ரயில் சேவை 23 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 24 ஆம் தேதியும் 25 ஆம் தேதியும் இலவசம்.
வரலாற்றில் முதன்முறையாக தைப்பூசத்திற்கு இலவச இரயில் சேவை மடாணி அரசு தான் வழங்குகிறது என்பது பாராட்டுக்குரியது.
இந்த இரண்டு இலவச சேவைக்கான முழு செலவை டயா மாஜூ இன்பிரசெக்டர் நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி லொக்கின் பத்திரிகை செயலாளர் லொ வை ஹோங்கை, சிலாங்கூர் இன்று தொடர்பு கொண்டு கேட்ட போது தெரிவித்தார்