NATIONAL

சுல்தானுக்கு எதிரான பாஸ் கட்சித் தலைவரின் கருத்து- பெரிக்கத்தானின் நிலைப்பாடு என்ன? கெஅடிலான் கேள்வி

ஷா ஆலம், மார்ச் 1- மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின்
இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் சினம் கொள்ளும் அளவுக்கு பாஸ் கட்சித்
தலைவர் பண்பற்ற முறையில் நடந்து கொண்டது குறித்து சிலாங்கூர்
மாநில பெரிக்கத்தான் நேஷனலின் நிலைப்பாடு என்ன என்று மாநில
கெஅடிலான் கேள்வியெழுப்பியுள்ளது.

பாஸ் கட்சித் தலைவர் மற்றும் தொண்டர்களின் மத்தியில் நற்பெயர்
வாங்க வேண்டும் என்பதற்காக மேன்மை தங்கிய சுல்தானின் உத்தர்வை
புறக்கணிக்கவும் பெரிக்கத்தான் துணிந்து விட்டதாக கெஅடிலான்
கட்சியின் மாநில துணைத் தலைவர் பொர்ஹான் அமான் ஷா
கூறினார்.

சிலாங்கூர் சுல்தான் சினம் கொள்ளும் அளவுக்கு பண்பற்ற முறையில்
டான்ஸ்ரீ ஹாடி அவாங் நடந்து கொண்ட விவகாரத்தில் டத்தோஸ்ரீ முகமது
அஸ்மின் அலி தலைமையிலான மாநில பெரிக்கத்தான் நேஷனலின்
நிலைப்பாடு என்ன என்பதை மாநில கெஅடிலான் அறிய விரும்புகிறது
என்று அவர் சொன்னார்.

பாஸ் கட்சித் தலைவர் மற்றும் தொண்டர்களின் அபிமானத்தைப் பெற
வேண்டும் என்பதற்காக சிலாங்கூர் சுல்தானின் உத்தரவை
வேண்டுமென்றே புறக்கணிக்க மாநில பெரிக்கத்தான் நேஷனல் தயாராக
உள்ளதா? என அவர் கேள்வியெழுப்பினார்.

கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் முன்பு
சர்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சமயத்திலும் பெரிக்கத்தான்
நேஷனலின் நிலைப்பாடு தெளிவாக தெரிந்தது அவ்விவகாரம் மீது
சுல்தான் கோபமும் வருத்தமும் அடைந்த போதிலும் பெரிக்கத்தான்
மௌனம் சாதித்தது என்றார் அவர்.

டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வெளியிட்ட கருத்து தொடர்பில்
சிலாங்கூர் சுல்தான் அலுவலகம் கடந்த மாதம் 27ஆம் தேதி மாநில பாஸ்
கட்சித் தலைவர் டத்தோ டாக்டர் அப்துல் ஹலிம் தாமுரிக்கு அனுப்பிய
கடிதத்தை குறிப்பிட்டு பொர்ஹான் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

மாநிலத்தில் ஒற்றுமைக்கான அனைத்து முயற்சிகளுக்கும் மாநில
கெஅடிலான் தோள்கொடுக்கும் அதேவேளையில் நாட்டிலுள்ள
முஸ்லீம்கள் மத்தியில் பிளவு ஏற்படும் அளவுக்கு மலாய்
ஆட்சியாளர்களை ஏளனம் செய்யும் வகையிலான அறிக்கைளையும் அது
கண்டிக்கிறது என பொர்ஹான் குறிப்பட்டார்.


Pengarang :