ஷா ஆலம், ஜூன் 6: ஜூன் 9 ஞாயிற்றுக்கிழமை ஆம் தேதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் ஷா ஆலம் கார் இல்லாத் தின நிகழ்ச்சியை முன்னிட்டு சாலையின் ஒரு பகுதியை ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) மூடுகிறது.
இந்நிகழ்வு காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும்.
இதற்காகச் சுதந்திர சதுக்கம், பெர்சியாரான் தாசேக், பெர்சியாரான் பெர்பண்டாரான், பெர்சியாரான் மஸ்ஜிட், பெர்சியாரான் டத்தோ மந்திரி மற்றும் பெர்சியாரான் டாமாய் ஆகிய சாலைகள் மூடப்படும்.
இதையடுத்து, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, குறிப்பிட்ட சாலைகளை அக்காலகட்டத்தில் பயன்படுத்த வேண்டாம் என்று அதன் நிறுவன மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
“குறிப்பிட்ட சாலைகளைப் பயன்படுத்துவோர் தங்கள் இலக்கை அடைய மாற்றுச் சாலைகளைப் பயன்படுத்தவும் என எம்பிஎஸ்ஏ கேட்டுக் கொள்கிறது” என்று முகமட் அசார் முகமட் ஷெரீப் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஏரோபிக்ஸ் மற்றும் உணவு விற்பனை போன்ற பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகளுடன் ஷா ஆலம் குடிமக்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏதேனும் கேள்விகள் இருந்தால் எம்பிஎஸ்ஏ கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு பிரிவை 03-5522 2734 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.