தாசிக் குளுகோர், ஜூலை 1: ஐடில்பித்ரி போது சிலாங்கூர் மாணவர்களை அழைத்து வருவதற்காக மாநில அரசு வழங்கும் இலவசப் பேருந்து திட்டம் அடுத்த ஆண்டும் தொடரும்.
மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதுடன் அவர்களின் நலனைக் காக்க மாநில அரசு இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
“ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் சிலாங்கூர் தீபகற்ப மலாய் மாணவர் சங்கம் (GPMS), சிலாங்கூர் மாணவர் சங்கம் (பெர்மாஸ்) மற்றும் மாணவர் பிரதிநிதி கவுன்சில் (MPP) ஆகியவற்றின் விண்ணப்பங்களை ஆய்வு செய்த பிறகு இந்த திட்டத்தை அரசு தொடரும்.
“இருப்பினும், இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் விவகாரங்களை எளிதாக்கும் வகையில் சிலாங்கூர் மாணவர்களின் தரவை புதுப்பிக்குமாறு நான் இந்த மூன்று தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நேற்று, மலேசியா அறிவியல் பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘செம்பாங் செம்போய்’ உரையாடல் அமர்வில், இந்த திட்டத்தை அரசு தொடருமா என்பதை அறிய விரும்பிய மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
முன்னதாக, ஐதில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு பல உள்ளூர் பல்கலைக்கழகங்களிலிருந்து 180க்கும் மேற்பட்ட சிலாங்கூர் மாணவர்களை அழைத்து வருவதற்காக மாநில அரசு ஐந்து பேருந்துகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.