தஞ்சோங் மாலிம், அக். 5 – ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
கடந்த காலத்திலோ அல்லது அண்மையிலோ நாட்டின் வருமானத்திலிருந்து கோடிக்கணக்காண வெள்ளியை அபகரித்த விஷயத்தை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என்றும் அவர் கூறினார்.
ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாடு இன்னும் அரசியல் சாக்காக பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆம், அவர்கள் நாட்டுக்கு பங்களித்திருக்கிறார்கள்… அது உண்மைதான். அதே சமயம் கிராமத் தலைவர், பொங்குலு முதல் இமாம் வரை அனைவரும் பங்களிக்கிறார்கள். அவர்களுக்கு திருடும் உரிமையை அது அளிக்குமா? பள்ளிவாசலுக்கு பங்களித்தார் என்பதற்காக இமாம் அங்கு திருட முடியுமா?
அதே போல் ஒரு நிதி அமைச்சர் தனது பங்களிப்புக்காக திருடுவதை நியாயப் படுத்துமா?” என அவர் கேள்வியெழுப்பினார்.
இன்று இங்குள்ள சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தில் (உப்ஸி) தேசிய கல்வி தினம் தொடர்பில் ஆற்றிய விரிவுரையில் அவர் இவ்வாறு கூறினார்.
பேராக் மந்திரி புசார் டத்தோஸ்ரீ சராணி முகமட், உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காடிர் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் சாங் லீ காங் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், நாட்டின் கருவூலத்திலிருந்து திருடி குவித்த சொத்துகளை மக்களுக்கும் நாட்டுக்கும் திருப்பித் தருமாறு அன்வார்சொத்துக்களை முன்னாள் தலைவர்களுக்கு சவால் விடுத்தார்.