(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 5- தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோல சிலாங்கூர் நகரில் பெஸ்தா தீபாவளி லா எனும் விற்பனை விழாவுக்கு ஏற்பாடு செயயப்பட்டுள்ளது.
இந்த விழா கோல சிலாங்கூர் பண்டார் மெலாவத்தியில் வரும் அக்டோபர் 25 முதல் 30 வரை ஆறு நாட்களுக்கு காலை 10.00 மணி தொடங்கி இரவு 12.00 மணி வரை நடைபெறும்.
புக்கிட் மெலாவத்தி தொகுதி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த தீபாவளி விழாவில் தினமும் கலைஞர்களின் படைப்புகள், அதிர்ஷ்டக் குலுக்கு, அதிர்ஷ்டசாலி வருகையாளர்களுக்கு இலவச பற்றுச் சீட்டுகள், சமையல் போட்டி உள்ளிட்ட சிறப்பு அங்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பெஸ்தா தீபாவளி சந்தையில் உணவு, பலகாரங்கள், உடைகள், வளையல்கள், அலங்காரப் பொருள்கள் விற்பனை செய்வதற்கு கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் மெலாவத்தி தொகுதி ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்பிரமணியம் கூறினார்.
இந்த சந்தையில் கடைகளுக்கு விண்ணப்பம் செய்யும் முதல் 20
வணிகர்களுக்கு பத்து விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.