(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 5- பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சாலை சீரமைக்கப் படாத காரணத்தால் புக்கிட் கெமுனிங் 8வது மைல், லோட் நிலக் குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கி வந்த இன்னல்களுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் முயற்சியால் தீர்வு ஏற்பட்டுள்ளது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மானியத்தின் வாயிலாக இந்த சாலை அண்மையில் முழுமையாகச் செப்பனிடப்பட்டு புதுப் பொலிவைப் பெற்றது.
குடியிருப்பாளர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தொகுதி மானியத்தில் இருந்து சுமார் 50,000 வெள்ளியைப் பயன்படுத்தி இச்சாலையை தாங்கள் செப்பனிடப்பட்ட தாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கூறினார்.
இவ் வட்டத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ள மேலும் எட்டு லோட் நில சாலைகளை மாரிஸ் திட்டத்தின் வாயிலாக சீரமைப்பதற்கான விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்தாண்டில் அச்சாலைகளை சீரமைக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
லோட் குடியிருப்புகளில் சாலைகளைச் சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களின் ஒப்புதல் தேவை. அதன் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்ட சாலைகளின் பட்டியலை மாரிஸ் தரப்பிடம் ஒப்படைத்து விட்டோம். உரிய அங்கீகாரம் கிடைத்தவுடன் சாலைகளைச் செப்பனிடும் பணி தொடங்கப்படும் என்றார் அவர்.