MEDIA STATEMENTSELANGOR

ஆறு மாவட்டங்களில் 634 வேலைவாய்ப்பு கண்காட்சியின் வழி  வேலை கிடைத்தது

ஷா ஆலம், 6 அக்.: கடந்த  ஜூன் மாதம் நடைபெற்ற  வேலைவாய்ப்பு  கண்காட்சியின் வழி ஆறு மாவட்டங்களில்  மொத்தம் 634 பங்கேற்பாளர்கள் பணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.  மனித வள  ஆட்சிக்குழு உறுப்பினர் அந்த எண்ணிக்கையில், 168 பங்கேற்பாளர்கள் நேற்று கிள்ளான், டேவான் ஹம்சாவில் நடந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில்  வேலை பெற்றனர்.

மனிதவள ஆட்சிக்குழு  உறுப்பினர் பாப்பா ராய்டு சிலாங்கூர் மக்களை Bike Care-1000 திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும் அழைப்பு விடுத்தார், இது மார்ச் 1 வரை ஊழியர்களுக்கான மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன் பணம் செலுத்தும் உதவியாகும்.

நேற்றைய திட்டத்தில், மொத்தம் 30 முதலாளிகள் 3,748 வேலை காலியிடங்களுக்கு RM1,500 முதல் RM8,000 வரையிலான சம்பளத்துடன் கவுண்டர்களை திறந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மொத்தம் 168 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என வி.பாப்பாராய்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள், குறிப்பாக புதிய பட்டதாரிகள், வேலை தேர்வுக்கு வரம்புகளை வைக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

“தொழிலாளர் சந்தையில் திறன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், பட்டதாரிகளாக இருந்தாலும் அனுபவம் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்


Pengarang :