பெய்ரூட், அக். 5: பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ், லெபனானில் தங்களது மற்றொரு தளபதியின் மரணத்தை சனிக்கிழமை உறுதிப்படுத்தியதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (டிபிஏ) தெரிவித்துள்ளது.
ஹமாஸின் கூற்றுப்படி, துறைமுக நகரமான திரிபோலிக்கு வடக்கே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெத்தாவி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சயீத் அட்டாலா அலி கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலில் அலியின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டதாக லெபனான் செய்தி நிறுவனம் NNA தெரிவித்துள்ளது.
திரிபோலிக்கு அருகில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரங்கள் முன்னதாக தெரிவித்தன.
– பெர்னாமா-டிபா