கோலாலம்பூர், அக். 8- வழிப்பறி கொள்ளையின் போது 78 வயது மூதாட்டி
தரையில் விழுந்து தலையில் காயங்களுக்குள்ளான வேளையில் காலி
கைப்பையுடன் கொள்ளையன் தப்பிச் சென்றான்.
இச்சம்பவம் தலைநகர், பங்சாரில் உள்ள ஜாலான் லீமாவ் மானிஸில்
நேற்று அதிகாலை 6.34 மணியளவில் நிகழ்ந்ததாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி கூ மஷாரி மான் கூ முகமது கூறினார்.
இந்த சம்பவத்தில் தலையில் கடுமையான இரத்த கசிவுக்கு உள்ளான
அந்த 78 வயது மூதாட்டி மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருவதாக அவர் சொன்னார்.
சம்பவம் நிகழ்ந்த போது வழக்கம் போது நாளிதழ் வாங்குவதற்காக அந்த
மாது கடையை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
அப்போது அந்த மூதாட்டியின் வசமிருந்து கைப்பையை மோட்டார்
சைக்கிளில் வந்த ஆடவன் ஒருவன் பறித்துச் சென்றதாகக் கூறிய அவர்,
அந்த கைப்பையில் விலையுயர்ந்த பொருள்கள் எதுவும் இல்லை என
கூறப்படுகிறது என்றார். இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 394வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.