ஷா ஆலம், அக். 8- சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் 40ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் பங்கோர், கோரல் பே ரிசோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தை மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.பாப்பா ராய்டு அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்த பொதுக் கூட்டத்தில் சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளி
தலைமையாசிரியர் மன்றத்தின் பொறுப்பாளர்களான எஸ்.எஸ்.பாண்டியன், மற்றும் எஸ்.மணிசேகர், தமிழரசு, கணேஷ் ராமசாமி, கோவிந்தசாமி, சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் 40வது பொதுக் கூட்டத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த நிர்வாகக் குழுவினருக்கு பாரப்பாராய்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் பயனளிக்கக்கூடிய திட்டங்கள் இந்த கூட்டத்தில் முன்னெடுக்கப்படும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பொதுக் கூட்டத்தில் மாநிலத்தில் உள்ள 99 தமிழ் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பங்கேற்கின்றனர்.