SELANGOR

ஷா ஆலம்  மீன்பிடி போட்டியில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், அக் 9: RM 44,400 ரொக்கப் பரிசை வழங்கும் ஷா ஆலம் 2024 மீன்பிடி
போட்டி எதிர்வரும் அக்டோபர் 27 ஆம் தேதி தாமான் தாசிக் ஷா ஆலமில்  நடைபெறும்.
இப்போட்டியில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள். இது காலை 8 மணி
முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும்.

நகரின் 24வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த போட்டி ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாகவும் முகநூல் மூலம் எம்பிஎஸ்ஏ அறிவித்துள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறுபவருக்கு RM24,000 ரொக்கம் பரிசாக
வழங்கப்படும். மேலும், இரண்டாவது இடத்திற்கும் (RM6,000), மூன்றாம்
இடத்திற்கு (RM3,000) வழங்கப்படும்

அது தவிர, நான்காவது முதல் 20வது இடங்களுக்கு RM200 மதிப்புள்ள
ஆறுதல் பரிசுகளும், 21 முதல் 100வது இடங்களுக்கு RM100 மதிப்புள்ள
ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

.
முதல் 300 பங்கேற்பாளர்களுக்கு 10 அதிர்ஷ்டக் குலுக்கு பரிசுகளை
வழங்குவதோடு, இலவச 'கேம்பிங்' நாற்காலி ஒன்றும் தரப்படும்.
இப்போட்டியில் பங்கேற்புக் கட்டணமாக RM100 வசூலிக்கப்படும் என்று
எம்பிஎஸ்ஏ தெரிவித்துள்ளது.
மேலும் தகவலுக்கு, போஸ்டரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
அல்லது நுழைவுப் படிவம் மற்றும் நிபந்தனைகளுக்கு www.mbsa.gov.my என்ற
இணையதளத்தை நாடவும்.
ஏதேனும் கேள்விகள் இருந்தால், 03-5510 5133 நீட்டிப்பு 1660/ 1284/1215
என்ற எண்ணில், எம்பிஎஸ்ஏ லேண்ட்ஸ்கேப் துறையைத் தொடர்பு
கொள்ளவும்.

Pengarang :