MEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களை மந்திரி புசார் நேரில் சென்று கண்டார்

கோலாலம்பூர்   அக் 9 ;- கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் ஜெராம் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அமான் தேசியப் பள்ளியில் அமைக்கப்பட்ட  பிபிஎஸ்யில் தஞ்சம் அடைந்துள்ளனர்.அவர்களை நேரில் சென்று பார்வையிட்டு மந்திரி புசார் ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் போது கோலா சிலாங்கூர் நிலத்துறை அதிகாரி, பெங்குலு முக்கிம்  ஈஜோக், இந்திய சமூகத் தலைவர் திரு மணிவண்ணன், அமான் தேசிய பள்ளியின்
தலைமையாசிரியர் மற்றும்  அதிகாரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


Pengarang :