ஷா ஆலம், அக் 9: சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி மீண்டும்
(SIBF) 2024 நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை சித்தியாசிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெறும்.
ஏழு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வுக்கு 300,000க்கும் அதிகமான பேர் வருகை
புரிவதை இலக்காக கொண்டுள்ளதாக சிலாங்கூர் பொது நூலக
இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முஹமட் கூறினார்.
இந்த முறை இந்நிகழ்வு இந்தோனேசியா, சவுதி அரேபியா
மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற பல்வேறு
வெளிநாடுகளைச் சேர்ந்த கண்காட்சி யாளர்கள்,
வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள், புத்தகத் துறையினரையும்
உள்ளடக்கியது.
ஆகஸ்ட் 16 அன்று கையெழுத்தான PPAS மற்றும் வட சீனா
இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) விளைவாக இந்த
ஆண்டின் SIBF இல் விருந்தினர் நாடாக பங்கேற்க சீனாவும்
அழைக்கப்பட்டுள்ளது என, அவரை தொடர்பு கொண்டபோது
கூறினார்.
இதில் தேசிய எழுத்தாளர்களின் நேர்காணல், வண்ணம்
தீட்டுதல், வரைதல், அதிர்ஷ்ட குலுக்கு உள்ளிட்ட பல்வேறு
சுவாரசியமான நிகழ்ச்சிகள் இடம் பெறும் என்றார்.