ஷா ஆலம், அக்.10 – கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு இம்மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடா மைடின் கார் பேரங்காடியின் நிறுத்துமிடத்தில் மாலை மணி 7.00 முதல் இரவு 10.00 வரை இந்த நிகழ்வு நடைபெறும்.
இந்த தீபாவளி பொது உபசரிப்பில் பாரம்பரிய நடனம், பாடல் உள்பட பல்வேறு அங்கங்கள் இடம்பெறும்.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியை சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்வதுடன் தொடர்ந்து நடைபெறும் தீபாவளி விருந்திலும் கலந்து கொள்ளும்படி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கேட்டுக் கொள்கிறார்.