SELANGOR

சிலாங்கூர் அக்ரோ ஃபிஸ்ட் (SAF) திட்டத்தை மீண்டும் ஏற்பாடு செய்ய மாநில அரசு உத்தேசம்

ஷா ஆலம்,அக் 10: சிலாங்கூர் அக்ரோ ஃபிஸ்ட் (SAF) திட்டம் இறுதியாக 2019 இல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எனவே, இத்திட்டத்தை அடுத்த ஆண்டு மீண்டும் ஏற்பாடு செய்ய மாநில அரசு உத்தேசித்துள்ளது.

தாவரக் கண்காட்சிகள் உட்பட பல்வேறு கூறுகள் இந்த நிகழ்வின் சிறப்பு அம்சங்களாக இடம்பெறும் என்று விவசாய ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் கூறினார்.

“இந்த நிகழ்வு   இறுதியாக   கோவிட் -19 தொற்று நோய்க்கு காலத்திற்கு முன்   ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும்   ஒருமுறை நடைபெறும் மலேசிய விவசாயம், தோட்டக்கலை மற்றும் வேளாண் சுற்றுலா கண்காட்சி (மஹா) க்கு பதிலாக அடுத்த ஆண்டு மீண்டும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய நாங்கள் முன்மொழிகிறோம்.

சிலாங்கூர் அக்ரோ ஃபிஸ்ட் 2012 ஆம் ஆண்டு முதல் விவசாயத் துறையை மேம்படுத்துதல் மற்றும் மாநிலத்தில் விவசாய தொழில் முனைவோரின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஒரு வருடாந்திர நிகழ்வாக இருந்து வந்ததது குறிப்பிடத்தக்கது.


Pengarang :