ஷா ஆலம், நவ 6: நேற்று தொடங்கிய வடகிழக்கு பருவமழை (எம்டிஎல்) காலத்தை எதிர்கொள்ள சுமார் 7,500 சிலாங்கூர் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
சமூக மட்டத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் மலேசிய ஆயுதப்படையின் (ஏடிஎம்) பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்றிருப்பதாக சிலாங்கூர் செயல்பாட்டு நடவடிக்கை குழுவின் தலைவர் சடினா சுஃபியன் கூறினார்.
“அனைத்து சிலாங்கூர் தன்னார்வலர்களும் தயாராகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் ஒவ்வொரு மாதமும் கூட்டங்களை நடத்துகிறோம்.
“நாளை நாங்கள் செக்ஷன் 13 இல் உள்ளூர் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளோம், குறிப்பாக பேரிடர் மேலாண்மை பற்றிய தன்னார்வலர்களின் அறிவை வலுப்படுத்துவதற்காக ஆகும் ,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
இதற்கிடையில், வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்நோக்கும் முன் ஏற்பாடு நடவடிக்கையாக சிலாங்கூர் தன்னார்வாளர்கள் குழுவில் சேர, உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் குறைந்தபட்சம் 800 இளைஞர்களுக்கு சடினா இலக்கு வைத்துள்ளார்.
யுனிசெல் மாணவர்கள் பங்கேற்பு வரவேற்கப்படுகிறது . அவர்களுக்கு அக்டோபர் மற்றும் நவம்பர் இரண்டு மாதங்களில் ஊக்கப் பயிற்சி அளிக்கப்படும்.