NATIONAL

20 கடை கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இரண்டு முன்னாள் குற்றவாளிகள் கைது

கோத்தா பாரு, நவ 6: கடந்த வெள்ளிக்கிழமை மாநிலத்தில் குறைந்தது 20 கடை கொள்ளைகளில் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு முன்னாள் குற்றவாளிகள் கம்போங் பாங், பெங்கலான் சேபாவில் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஏப்ரலில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 33 மற்றும் 34 வயதுடைய இருவரும் தும்பாட், பாசிர் மாஸ் மற்றும் ஜெலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப் படுவதாகக் கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமட் கூறினார்.

“இவர்களின் செயல் முறை இரவு நேரங்களில் கொள்ளையடிப்பதும், மின்சார ரம்பங்கள்,இயந்திரங்களை பயன்படுத்தி கடைகளுக்குள் புகுந்து திருடுவதுதான்.

“33 வயதான நபருக்கு ஒரு குற்றவியல் பதிவு மற்றும் மூன்று போதைப்பொருள் பதிவுகள் உள்ளன, மற்றொருவருக்கு ஏழு குற்றவியல் பதிவுகள் மற்றும் நான்கு போதைப்பொருள் பதிவுகள் உள்ளன” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் உட்கொண்டிந்த இருவரும் இப்போது குற்றவியல் சட்டப்பிரிவு 457 இன் கீழ் மேல் விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையின் மூளையாக கருதப்படும் முகமட் அமீர் இசுடின் முகமட் இசாம் (26) என்ற நபரை காவல்துறை தேடி வருவதாகவும், அந்நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு நேரில் வந்து தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் முகமட் யூசாப் தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :