கோலாலம்பூர்,நவ 7: தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரை மாநிலங்கள் மற்றும் சபாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 20 முதல் 40 சதவீதம் கூடுதல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“கடந்த ஆண்டு நமது வடகிழக்கு பருவமழை எல் நினோ நிகழ்வுடன் ஏற்பட்டது. பொதுவாக இந்த எல் நினோ வானிலை வழக்கத்தை விட குறைவான மழையை ஏற்படுத்தும், ஆனால் இந்த ஆண்டு லா நினா ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை லா நினா நிகழ்வுடன் ஒரே நேரத்தில் ஏற்பட்டதால் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட் மலேசியா) இயக்குநர் ஜெனரல் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறினார்.
“சூழலின் அடிப்படையில்,கடந்த ஆண்டை விட 20 முதல் 40 சதவிகிதம் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது,” என்று அவர் கூறினார்.
சமீபத்திய ஆராய்ச்சித் தகவலின் அடிப்படையில், இந்நாட்டில் லா நினா நிகழ்வு பலவீனமாக ஏற்பட்டு மிதமான தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்றும், மழைப்பொழிவு முறைகளின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் முகமட் இஷாம் கூறினார்.
பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதை தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் என்ற முறையில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி நினைவூட்டினார்.