NATIONAL

ரம்ஜான் பஜாருக்கான தற்காலிக உரிம விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், நவ 11: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் 2025 ஆண்டிற்கான ரம்ஜான் பஜாருக்கான தற்காலிக உரிம விண்ணப்பங்களை இன்று முதல் திறந்துள்ளது.

இதற்கு intranet.mpaj.gov.my/penjaja/login.php என்ற இணைப்பின் மூலம் நவம்பர் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உள்ளாட்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

 16 ரம்ஜான் பஜார் பகுதிகளை உள்ளடக்கிய மொத்தம் 884 இடங்களை வர்த்தகர்களுக்கு  வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

“இதில் எலைட் ரம்ஜான் பஜார் தற்காலிக உரிமம், ரம்ஜான் பஜார் தற்காலிக உரிமம் மற்றும் ரம்ஜான் பஜார் தற்காலிக பெர்மிட் உட்பட பல உரிம வகைகள்  அடங்கும்,” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

கூடுதல் தகவலுக்கு, அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் தொழில் முனைவோர் உரிமம் மற்றும் மேம்பாட்டுத் துறையை 03-4285 7324/7170 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


Pengarang :