ஷா ஆலம்,நவ 11: நேற்று ஷா ஆலம் மாநகராட்சியின் (எம்பிஎஸ்ஏ)வாகன இல்லா தினம்
சுமார் 3,000 தனிநபர்களின் பங்கேற்புடன் நடந்தது.
சுமார் 3,000 தனிநபர்களின் பங்கேற்புடன் நடந்தது.
அனைத்து பங்கேற்பாளர்களும் நகர மையத்தைச் சுற்றி ஐந்து கிமீ ஓட்டத்தில் பங்கேற்றதாக அதன் சமூக மேம்பாட்டு இயக்குநர் ஷஹ்ரின் அஹ்மட் தெரிவித்தார்.
“இது ஷா ஆலம் மாநகராட்சிக்கும் சமூகத்துக்கும் இடையிலான மாதாந்திர நிகழ்வு
ஆகும்.பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கை தவிர, சுற்றுச்சூழலின் தரத்தையும் இத்திட்டம் மேம்படுத்தும். மேலும், பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடன் இந்த திட்டம் மிகுந்த பலனைத் தருகிறது என்று ஷஹ்ரின் கூறினார்.

அதுமட்டுமில்லாம்ல், டத்தாரான் கெமெர்டேகாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் “MBSB“ வங்கியிலிருந்து 100 ஆதரவற்ற குடியிருப்பாளர்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன. அவர்கள் RM100 மதிப்புள்ள அரிசி, எண்ணெய், சர்க்கரை, பால், மாவு மற்றும் சார்டின் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெற்றனர்," என்று அவர் கூறினார்.