NATIONALSELANGOR

நவம்பர் 15ஆம் தேதி மாநில அரசின் பட்ஜெட் தாக்கல்

ஷா ஆலம், நவ. 8 – சிலாங்கூர் மாநில அரசின் 2025 வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எதிர்வரும் நவம்பர் 15ஆம் தேதி மாலை 3.00 மணிக்குத் தாக்கல் செய்யவிருக்கிறார்.

மாநில அரசு தலைமைச் செயலகத்தின் அனெக்ஸ் கட்டிடத்தில் உள்ள சட்டமன்றத்தில்  நடைபெறும்  இந்த வரவு செலவுத் திட்டத் தாக்கல் நிகழ்வை  சிலாங்கூர்கினி,  சிலாங்கூர் ஜெர்னல், சிலாங்கூர்கினி மாண்டரின் மற்றும் சிலாங்கூர்கினி தமிழ் இணையத் தளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

மேலும், இந்த பட்ஜெட் தாக்கல் நிகழ்வு https://www.facebook.com/ MediaSelangor வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இது தவிர, இண்ட்ஸ்டாகிராம், டிக் டாக், டெலிகிராம், எக்ஸ் தளம் மற்றும்
MYTV MANA-MANA. ஆகிய சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இந்த ஒளிபரப்பைக் காணலாம்.

மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிப்பதற்கும் முதலீடுகளை  ஈர்ப்பதற்கும் தேவையான பிரத்தியேக முன்னெடுப்புகள்  இந்த வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக மந்திரி புசார் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி கூறியிருந்தார்.

மக்களின் நலனைக் காக்கும் அதேவேளையில்  நாட்டின் மொத்த உள்நாட்டு  உற்பத்தியில் முதன்மைப் பங்களிப்பாளர் என் பெயரையும் தக்க வைத்துக் கொள்வதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நவம்பர் 29 ஆம் தேதி வரை  நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றக் கூட்டத்துடன் இணைந்து வரவு செலவுத் திட்டமும் தாக்கல் செய்யப்படும் என்று சட்டமன்ற சபாநாயகர்  லாவ் வேங் சான் முன்னதாகக் கூறியிருந்தார்.


Pengarang :