ஷா ஆலம், டிச 2: சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் (யுனிசெல்) தலைவரும், துணைவேந்தருமான பேராசிரியருமான டத்தோ டாக்டர் முகமது ரெட்சுவான் ஓத்மான் மலாயா பல்கலைக்கழகத்தின் (யுஎம்) நிறைநிலைப் பேராசிரியர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
மலாயா பல்கலைக்கழகத்தின் 64வது பட்டமளிப்பு விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக யுனிசெல் வர்த்தக தொடர்புப் பிரிவு இயக்குநர் கூறினார்.
பல்கலைக்கழகத்திற்கும் நாட்டிற்கும் குறிப்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியலிலும் மத்திய கிழக்கிலும் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் ரெட்சுவான் ஓத்மானுக்கு நிறைநிலைப் பேராசிரியர் வழங்கப்பட்டதற்கு வாழ்த்துகள்.
இந்த விருது யுனிசெலை சிறப்பான நிலைக்கு கொண்டு வருவதற்கும், போட்டித்தன்மையுடன் தொடருவதற்கும் கூடுதல் மதிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று ஹஸ்ரில் அபு ஹாசன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் யுனிசெலின் ஏழாவது தலைவராகவும் துணைவேந்தராகவும் பதவி வகித்து வரும் முகமது ரெட்சுவான், டாருல் ஏஹ்சான் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகவும் யுனிசெல் சென். பெர்ஹாட்டின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.