ஷா ஆலம், டிச 2: குடியிருப்பாளர்கள் எளிதான முறையில் சேவைகளை பெற உதவும் வகையில் கித்தா டெம்ப்ளர் செயலியை டெம்ப்ளர் தொகுதி அறிமுகப்படுத்தியது.
இந்த முறை குடியிருப்பாளர்களுக்கு தகவல்களைப் பரப்புவதற்கு உதவுகிறது என சட்டமன்ற உறுப்பினர் அன்பால் சாரி கூறினார்.
“இந்த செயலி மூலம், குடியிருப்பாளர்கள் தாமான் டெம்ப்ளரில் நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள், சிலாங்கூர் அரசாங்கத்தின் உதவி திட்டங்கள் மற்றும் உள்ளூர் வணிக விளம்பரங்கள் பற்றிய சமீபத்திய செய்திகளைப் பெறலாம்” என்று அவர் X பக்கத்தில் கூறினார்.
மேலும், இந்த செயலி தொகுதியின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், உள்ளூர்வாசிகளிடையே உறவுகளை வலுப்படுத்தவும் உதவுகிறது என்று சமூக நலன் ஆட்சிகுழு உறுப்பினர் அன்பால் சாரி கூறினார்.
இந்த செயலியை ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.