‘பாடு’ எனப்படும் மத்திய தரவுத்தள மையத்தில் இன்னும் பதிவு செய்யாதவர்கள் மற்றும் பதிவு செய்த நிலையிலும் மானியத்திற்கு தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப் பட்டவர்களிடமிருந்தும் மேல்முறையீடுகளை இந்த அறிவிப்பு அனுமதிக்கும் என்று அவர் கூறினார்.
ஒரு மேல் முறையீடு செயல்முறை இருக்கும். பெட்ரோல் நிலையங்களில் செயல்படுத்தப் படுவதற்கு முன்பு இதனை நாம் செய்தாக வேண்டும். எனவே, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (வகைப்படுத்தல் நிர்ணயம்) அப்பணி முடிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் இன்று ரோன் 95 மானியச் செயலாக்கம் மற்றும் அதன் அணுகுமுறை குறித்து புத்ராஜெயா தொகுதி பெரிக்கத்தான் உறுப்பினர் டத்தோ ராட்ஸி ஜிடின் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
ரோன்95 மானியம் நிகர செலவழிப்பு வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படும். 85 சதவீத மலேசியர்கள் இதற்கு தகுதியுடையவர்கள் என்று ரபிஸி தெரிவித்தார்.
முன்னதாக, ரோன்95 பெட்ரோலுக்கான இலக்கு மானியத்தின் வாயிலாக 15 சதவீத பயனீட்டாளர்களைக் கொண்ட பணக்கார தனிநபர்கள், வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் வணிகப் பிரிவினரிடமிருந்து என ஆண்டுக்கு 800 கோடி வெள்ளி சேமிப்பை ஏற்படுத்தலாம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாகக் கூறியிருந்தார்.