கோலாலம்பூர், டிச. 11 – இன்று தனது 79வது அதிகாரபூர்வ பிறந்தநாளைக் கொண்டாடும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சுல்தான் ஷராபுடின், தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் நோராஷிகின் மற்றும் சிலாங்கூர் அரச குடும்பத்திற்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க பிரார்த்திக்கிறேன் என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.
ஆட்சியாளரின் பிறந்தநாளையொட்டி, இஸ்தானா ஆலம் ஷாவில் இன்று நடைபெற்ற விருதளிப்பு விழாவில் 94 பேருக்கு மாநில விருதுகள், பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கப்பட்டன.