NATIONAL

மக்களவையில் 2024 இணைய பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்

கோலாலம்பூர், டிச.12 – மலேசியாவில் இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதையும் தரம் உயர்த்துவதையும்  நோக்கமாகக் கொண்ட  2024 இணைய பாதுகாப்பு மசோதா  மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இத்த மசோதா மீதான வாக்கெடுப்பில்  77 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 55 உறுப்பினர்கள்  எதிராகவும் வாக்களித்த வேளையில்  90 பேர் வாக்களிப்பில்  கலந்து கொள்ளவில்லை.

அடுத்தாண்டு ஜனவரியில் திட்டமிடப்பட்ட உரிமம் வழங்கும் செயல்முறையில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்கள் மீது சட்டம் கவனம் செலுத்தும் என்று பிரதமர் துறையின் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான்  கூறினார்.

கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு  மலேசியர்கள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதால் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றங்கள்,  பெருகி வரும்  சவால்கள் மற்றும் அபாயகரமான இணையச் சூழல்   காரணமாக இந்த சட்ட அமலாக்கம் அவசியமாகிறது என்று அவர் தெரிவித்தார்.

லட்சக்கணக்கான  கணக்கான பயனர்கள் மற்றும் கோடிக்கணக்கான வெள்ளி இடர் நிலையில் இருப்பதால்   சேவை வழங்குநர்கள் இனியும் லாபத்திற்காக மட்டும் செயல்பட முடியாது. எங்கள் எல்லைக்குள் நுழையும் போது​​ அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்  என்று அவர் அஸாலினா குறிப்பிட்டார்

ஆபத்தான உள்ளடக்கத்தினால்  பயனர்கள் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் உரிமம் பெற்ற  சேவை வழங்குநர் மற்றும் உரிமம் பெற்ற உள்ளடக்கப் பயன்பாடுகள் சேவை வழங்குநரின் கடமையை இந்த மசோதா உறுதிப்படுத்துகிறது என்றார் அவர்.


Pengarang :