NATIONAL

கடத்தல் முயற்சி முறியடிப்பு- வெ.500 மதிப்புள்ள 52 கால்நடைகள் பறிமுதல்

கோத்தா பாரு, ஜன 12- பாசீர் மாஸ் மஸ்ஜிட் முக்கிம் பாக்கோங் பகுதியில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் சுமார் 506,000 வெள்ளி மதிப்புள்ள மாடு, ஆடு, எருமை போன்ற கால்நடைகளை கடத்தும் முயற்சியை பொது நடவடிக்கைப் பிரிவின் (பிஜிஏ) தென்கிழக்கு பிராந்தியம் வெற்றிகரமாக முறியடித்தது.

ஓப் தாரிங் வாவாசான் கிளந்தான்  நடவடிக்கையின் கீழ் நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிளவில் சோதனை மேற்கொண்ட தென்கிழக்கு பிராந்திய பிஜிஏ நடவடிக்கை பிரவின் குழுவினர் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட இரு லோரிகளைத் தடுத்து நிறுத்தியதாக அதன் கமாண்டர் டத்தோ நிக ரோஸ் அஸாரி நிக் அப்துல் ஹமிட் கூறினார்.

அச்சோதனையில் முறையான அனுமதி இன்றி 5,200 கிலோ எடை கொண்ட எட்டு மாடுகள், 3,200 கிலோ எடை கொண்ட நான்கு எருமைகள் மற்றும் 4,000 கிலோ எடை கொண்ட 40 ஆடுகள் அவ்விரு  லோரிகளில் ஏற்றி வரப்பட்டது கண்டறியப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டுச் சந்தைக்காக அந்த கால்நடைகளைக் கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் 28 மற்றும் 30 வயதுடைய இரு ஆடவர்களைத் தாங்கள் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகளும் லோரிகளும் கோம்தாக் புக்கிட் பக்திக்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறிய அவர், இந்த பறிமுதல் தொடர்பில் 1953ஆம் ஆண்டு விலங்குகள் சட்டத்தின் 36(1)வது பிரிவின் கீழ்  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :