ஷா ஆலம், ஜன. 14- இன்று கொண்டாடப்படும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இன்று நாம் கொண்டாடும் 2025 பொங்கல் பண்டிகை அனைவருக்கும் வளப்பத்தையும் நல்லாசியையும் வழங்கும் என நம்புகிறேன் என்று மந்திரி பெசாரின் இந்திய சமூகத்திற்கான சிறப்பு அதிகாரியுமான அவர் குறிப்பிட்டார்.
சமயங்களுக்கிடையிலும் சமூகங்களுக்கு இடையிலும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மேம்படுத்தும் வகையில் அனைவரும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.
குறிப்பாக இந்து மக்களுக்கு இந்தப் பண்டிகை நலத்தையும் வளத்தையும் கொண்டுவர செந்தோசா சட்டமன்றத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக டாக்டர் குணராஜ் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.