NATIONALSELANGOR

கொள்கலன் லோரியை சுற்றுலா பஸ் மோதியது- 23 பயணிகள் காயம்

நிபோங் திபால், ஜன. 14- சுற்றுலா பேருந்து ஒன்று கொள்கலன் லோரியின்  பின்புறம் மோதியதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 23 பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 157.8வது கிலோ மீட்டரில் வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பில் இன்று அதிகாலை 4.16 மணியளவில் தாங்கள் தகவலைப் பெற்றதாக பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரவு கமாண்டர் சைபுல் பாஹ்ரி கூறினார்.

சம்பவ இடத்தை அடைந்த போது 24 பயணிகள், ஓட்டுநர் மற்றும் உதவியாளருடன் பயணம் செய்த பேருந்து ஒன்று கொள்லன்  லோரியின் பின்புறம் மோதியது கண்டறியப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 23 பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் இருவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சுங்கை பாக்காப் மற்றும் செபராங் பிறை மருத்துவனைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த விபத்து காரணமாக அந்த நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக அவர் கூறினார்.


Pengarang :