ஷா ஆலம், ஜன 15: துர்நாற்றம் மாசுபாடு ஏற்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஜாலான் காப்பாரில் உள்ள சட்டவிரோதப் பெயிண்ட் பட்டறையை மூட கிள்ளான் மாநகராட்சி (எம்பிடிகே) உத்தரவிட்டது.
குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்த பட்டறைக்கு திட்ட அனுமதி மற்றும் தகுதிச் சான்றிதழ் (சிஎஃப்) இல்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டதாக எம்பிடிகே முகநூல் மூலம் அறிவித்தது.
“சோதனை முடிவில் கிராம வீட்டு மனையில் அப்பட்டறை அமைந்திருப்பதைக் எம்.பி.டி.கே. கண்டறிந்துள்ளது.
அது வெளிநாட்டு தொழிலாளர்கள் கண்காணிப்பில் இருப்பதும் கண்டறியப்பட்டது. எம்.பி.டி.கே.ஊழியர்கள் நிறுவனத் தகவல்களைக் கேட்டபோது அத்தொழிலாளர்கள் ஒத்துழைக்காமல் ஓடிவிட்டனர்.
எம்பிகே வணிகம் மற்றும் தொழில்துறை வர்த்தக உரிம விதி 2007இன் கீழ் அப்பட்டறையை உடனடியாக மூட எம்பிடிகே உத்தரவிட்டது.
“நிர்வாகிகள் சட்டம் மற்றும் எம்பிடிகே அறிவுறுத்தல்களுக்கு இணங்குவதை உறுதி செய்ய கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டது.