உலு சிலாங்கூர், ஜன 15: பேரிடர்களை, குறிப்பாக வெள்ளத்தை எதிர்கொள்ள குடியிருப்பாளர்களுக்கு உதவ RM1 மில்லியனைத் எம்பிஐ தொடர்ந்து வழங்குகிறது.
இந்த ஒதுக்கீட்டில் பணம் மட்டுமல்ல, உணவு கூடைகள், அன்றாடத் தேவைகள் மற்றும் சலவை பொருட்கள் ஆகியவை அடங்கும் என எம்பிஐ தலைவர் அஹ்மட் அஸ்ரி சைனல் நோர் கூறினார்.
உலு பெர்னாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 47 பேருக்கு பண உதவியை வழங்கிய பிறகு, “பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி கிடைக்கும் வகையில் எம்பிஐ எப்போதும் சமூக மேம்பாட்டுத் துறையுடன் (ஜேகேஎம்) இணைந்து செயல்படுகிறது,” என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு, நிலச்சரிவு மற்றும் தீ உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, மாநில அரசின் துணை நிறுவனம் இதே தொகையை ஒதுக்கீடு செய்தது.