SELANGOR

மொத்த குப்பைகளை அகற்றும் திட்டத்திற்கு 384 ரோரோ தொட்டிகள் ஏற்பாடு

ஷா ஆலம், ஜன. 15: சீனப் புத்தாண்டை முன்னிட்டு மொத்த குப்பைகளை அகற்றும் திட்டத்தை மேற்கொள்ள ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) 384 ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ (ரோரோ) தொட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது.

நேற்று முதல் ஜனவரி 27 வரை அட்டவணைப்படி அனைத்து ரோரோ தொட்டிகளும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் வைக்கப்படும் என அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் முகமட் அசார் முகமட் ஷெரீப் கூறினார்.

“மூன்று டன் கொள்ளளவு கொண்ட ரோரோ தொட்டிகள், மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு திட்டமிடப்பட்ட இடங்களில் வைக்கப்படும். அந்த தொட்டிகள் நிரம்பினால் நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்கு முன்னதாகவே அகற்றப்படும்.

“இந்த சேவையை செயல்படுத்துவதன் நோக்கம் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் சுய துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை வழங்குவதற்காகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“பொதுமக்கள் எம்பிஎஸ்யின் அதிகாரப்பூர்வ முகநூல் சமூகப் பக்கத்திற்குச் சென்று ரோரோ தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களின் பட்டியலைச் சரிபார்க்கலாம்” என்று அவர் கூறினார்.


Pengarang :