ஷா ஆலம், ஜன 15: பிங்காஸ் திட்டத்திற்கு bingkasselangor.com இணையதளம் மற்றும் Selangkah செயலி என அதிகாரப்பூர்வ தளங்களில் விண்ணப்பிக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
முகநூல் அல்லது வாட்ஸ் செயலில் பரவும் பிங்காஸ் தொடர்பான தகவல்கள் அனைத்தும் போலியானது மற்றும் அதிகாரப்பூர்வமற்றது என சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்ப்பினர் அன்பால் சாரி தெரிவித்தார்.
“பிங்காஸ் விண்ணப்பதாரர்கள் கவனமாக இருக்குமாறு நினைவூட்டப்படுகிறார்கள். மாநில அரசு பிங்காஸ் உதவிச் சலுகைகளுக்காக எந்த ‘பேஸ்புக் பக்கத்தையும்’ உருவாக்கவில்லை.
“எனவே,பிங்காஸ் உதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மக்கள் சிண்டிகேட்களால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க இரண்டு அதிகாரப்பூர்வ தளங்களை மட்டுமே பயன்படுத்துமாறு நான் நினைவூட்டுகிறேன்.” என அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.