NATIONAL

தப்பியோடிய கைதியைப் பிடிக்க  மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை

தங்காக், ஜன. 16 – போலீஸ் தடுப்புக் காவலிலிருந்து   நேற்று பிற்பகல்  1.30 மணியளவில்  தப்பிச் சென்ற உள்ளூர் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மெல்லிய உடலமைப்பும் 170 சென்டிமீட்டர் உயரமும்,  கருமை நிறமும் கொண்ட முகமது  சைபுல்நிஜாம் ஜக்காரியா (வயது 38) என்ற அந்த ஆடவர்  1952ஆம் ஆண்டு  அபாயகர போதைப்பொருள் சட்டத்தின்  39பி பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்ததாக தங்காக் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் ரோஸ்லான் முகமது தாலிப் தெரிவித்தார்.

சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான  முயற்சிகள் தொடர்கின்றன.  மாவட்ட மற்றும்  காவல் துறை மாவட்டங்களிலுள்ள  அனைத்து  நுழைவாயில்களிலும் மோப்ப நாய் பிரிவு உட்பட அனைத்து கூறுகளையும் உள்ளடக்கிய ஓப் துத்தோப் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.

இங்குள்ள எண் 122, கம்போங் பாடாங் லாலாங் என்ற முகவரியைச் சேர்ந்த முகமது சைபுல்நிஜாம் மீதான விசாரணை   குற்றவியல் சட்டத்தின் பிரிவு 223 மற்றும் பிரிவு 224 இன் விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது  என்று ரோஸ்லான் கூறினார்.

தேடப்படும் நபர்  தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள்  தங்காக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் ஹாட்லைன் எண் 06-9785222 அல்லது வழக்கின் விசாரணை அதிகாரி ஏஎஸ்பி ஷரிதத்துல் அஃப்லாஹா இஸ்மாயிலை 019-2699573 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.


Pengarang :