கோலா நெரஸ், ஜன 16: உணவக வளாகத்தில் கசிந்த வாயுவை சுவாசித்து மயங்கி விழுந்த உணவகத்தின் ஊழியர்கள் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காலை 9.48 மணிக்கு அழைப்பு வந்ததையடுத்து 11 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என கோலா நெருஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) தலைவர் அஸ்மி உமார் கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக கோலா திரங்கானுவில் உள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு (HSNZ) அனுப்பப்பட்டுள்ளதாக அஸ்மி கூறினார்.
“இப்போதைக்கு, வளாகம் பாதுகாப்பாக உள்ளது. ஆனால், அபாயகரமான இரசாயன சிறப்புக் குழுவால் உறுதிப்படுத்தப்படும் வரை தற்காலிகமாக மூடப்படும்,” என்று அவர் கூறினார்.
– பெர்னாமா