NATIONAL

எல்.ஆர்.டி நிலையங்களை சுற்றி சைக்கிள் பாதைகளை அதிகரிக்க முயற்சி

சுபாங் ஜெயா, ஜன 16: சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் (PSP) ஒதுக்கீட்டை
பயன்படுத்தி சுபாங் ஜெயா மற்றும் SS15 எல்.ஆர்.டி நிலையங்களை சுற்றி சைக்கிள் பாதைகளை அதிகரிக்க சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் எண்ணம் கொண்டுள்ளார்.

இந்த வசதியானது பொது வாகனங்களை பயன்படுத்துபவர்கள் கார்களை சார்ந்திருப்பதை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம், குறிப்பாக பீக் ஹவர்ஸின் போது போக்குவரத்து பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என்று மிஷால் இங் மேய் சீ கூறினார்.

“இந்த மிதிவண்டி பாதையை ஒவ்வொரு ஆண்டும் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் ஒதுக்கீட்டில் விரிவுபடுத்துவோம் என செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

கடந்த டிசம்பரில் மலேசிய சாலை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து சுபாங் ஜெயா மாநகராட்சி மைக்ரோமொபிலிட்டி சாண்ட்பாக்ஸுக்கு (sandbox) அனுமதி பெற்றதாகக் கூறினார்.

இந்த ஒப்புதல் நகரத்தில் இ-ஸ்கூட்டர்கள் போன்ற மைக்ரோமொபிலிட்டி சேவைகளை இயக்க அனுமதிக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும்.

“குறிப்பாக எல்.ஆர்.டி நிலையங்களுக்கு வழிகளை இணைப்பதில் மைக்ரோமொபிலிட்டி சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. இது கார்களின் பயன்பாட்டைக் குறைக்கும் மற்றும் பார்க்கிங் பற்றாக்குறையின் சிக்கலை தீர்க்கும்.


Pengarang :