NATIONAL

வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய தொழிற்சாலைகளில் சோதனை

புத்ராஜெயா, ஜன. 17: சிலாங்கூரில் உள்ள செமினி மற்றும் பாலகோங் ஆகிய இடங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய மர மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் மலேசியக் குடிநுழைவுத் துறை (ஜிம்) சோதனை நடத்தியது.

பொதுத் தகவல் மற்றும் உளவுத்துறையின் அடிப்படையில் ஜனவரி 13 ஆம் தேதி அதிரடிக் குழுவினால் அத்தொழிற்சாலைகளில் சோதனை நடத்தப்பட்டது என்று குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜகாரியா ஷாபான் கூறினார்.

மொத்தம் 82 வெளிநாட்டவர்களும் ஏழு உள்ளூர்வாசிகளும் பரிசோதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“இந்தோனேசியாவைச் சேர்ந்த 3 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் மியான்மரை சேர்ந்த 27 ஆண்கள், 11 பெண்கள் அடங்கிய மொத்தம் 56 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அதில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு பெண், தாய்லாந்தைச் சேர்ந்த 4 பெண்கள் மற்றும் சீனாவைச் சேர்ந்த ஒரு ஆண் ஆகியோர் அடங்குவர்.

இந்தச் சோதனையின் போது,வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தப்பிச் செல்ல முயன்றதாக ஜகாரியா கூறினார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் குடிநுழைவு சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 இன் கீழ் குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படுகிது. அவர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காகப் புக்கிட் ஜாலில் குடிநுழைவு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

– பெர்னாமா


Pengarang :