NATIONAL

முதலாம் ஆண்டு மாணவர்களிடையே பார்வைத் திறன் குறைபாடு பிரச்சனை

புத்ராஜெயா, ஜன 17 – மலேசியாவில் குறிப்பாக புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களிடையே நிலவும் சுகாதாரப் பிரச்சனைகளில் முதன்மையானது பார்வைத் திறன் குறைபாடு ஆகும்.

புத்ராஜெயாவில் உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களில் 215 பேருக்குப் பார்வைத் திறன் குறைபாடு இருப்பதாக சுகாதார அமைச்சர், டத்தோ ஶ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது தெரிவித்தார். அவர் 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 239 பேராக இருந்ததாக சுட்டிக் காட்டினார்

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பார்வைத் திறன் பிரச்சனைகளை சுகாதாரக் குழுவின் சோதனையின் வழியாக அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி தெரிவித்தார்.

பார்வைத் திறன் குறைபாடு உள்ள மாணவர்களை ஆசிரியர்கள் முன் வரிசையில் அமரும்படி கூறினாலும் அந்நடவடிக்கை தற்காலிகமான ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :