(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜன. 23 – கோல குபு பாரு தொகுதி நிலையிலான பொங்கல்
விழா இம்மாதம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கெர்லிங் அருள்மிகு ஸ்ரீ
சுப்பிரமணியர் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
பிற்பகல் 2.30 மணி தொடங்கி இரவு 7.00 மணி வரை நடைபெறும் இந்த
பொங்கல் விழாவில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் கூறினார்.
இந்த விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள் பொங்கல் வைக்கும்
போட்டி, உறியடித்தல், கோலப் போட்டி, மலர் தொடுத்தல், வர்ணம்
தீண்டும் போட் உள்ளிட்ட நிகழ்வுகளில் பொது மக்கள் திரளாகக் கலந்து
சிறப்பிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.