NATIONAL

சீன புத்தாண்டு பெருநாட்கால அதிகபட்ச விலை திட்டத்தில் கூடுதலாக ஐந்து பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன

தெலுக் இந்தான், ஜன 23: சீன புத்தாண்டை முன்னிட்டு, பெருநாட்கால அதிகபட்ச விலை திட்டத்தில் கூடுதலாக ஐந்து பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு கே.பி.டி.என் அறிவித்துள்ளது.

தீபகற்பத்திற்கு சிவப்பு மிளகாய், பெரிய மஞ்சள் வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட பெரிய சிவப்பு வெங்காயம், சிறிய கடுகுக் கீறையும் (ஜப்பானிய கடுகுக் கீறை) மற்றும் சபா, சரவாக், லபுவான் ஆகிய மாநிலங்களுக்கு கோழி இறக்கைகளும் கூடுதல் பொருள்களாக அத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக, கே.பி.டி.என் அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்.

இதன் மூலம், கடந்த ஆண்டில் இடம்பெற்ற 11 பொருள்களை காட்டிலும், இவ்வாண்டு சீனப் புத்தாண்டுக்கான எஸ்எச்எம்எம்பி திட்டத்தில் 16 பொருள்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் விளக்கினார்.

”இவ்வாண்டு, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு மற்றும் தொழில்துறையினருடன் கே.பி.டி.என் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் விளைவாக, 2025 சீனப் புத்தாண்டு பெருநாட் கால அதிகபட்ச விலை திட்டத்தில் 16 வகையான பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன ” என்றார்.

ஜனவரி 25ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதி வரை எஸ்எச்எம்எம்பி திட்டம் அமலில் இருக்கும்


Pengarang :