ஷா ஆலம், ஜன 24: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா விற்பனை நாளை ஐந்து இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 12.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 2 கிலோ சமையல் எண்ணெய் 10.00 வெள்ளிக்கும் 5
கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது. இன்னும் கூடுதலாகப் பல பொருட்கள் இந்த மலிவு விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.